Recent Posts


செம்மொழியான தமிழ் மொழியாம் – ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது

'செம்மொழியான தமிழ் மொழியாம்' கேட்டேன். மூஞ்சிபுஸ்தகத்தில் மூலைக்கு மூலை லிங்க் கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்று தான் கேட்கத் தகைத்தது. நவீனத் தமிழ் அத்தாரிட்டியாகத் தன்னை ஆணித்தரமாக நிலைநிறுத்திக்கொள்ள கலைஞருக்கு இன்னொரு இடம் கிடைத்திருப்பதால் இது மாநாட்டிற்கான பாடல் மட்டுமல்லாது தமிழர்களின் 'anthem' ஆகவும் இருக்கவேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும். ஆண்டாண்டுகளாக நாம் பாடிவந்த கவித்துவம் (செய்யுள்-த்துவம்?) செறிந்த தமிழ்த்தாய் வாழ்த்து தறிகெட்டுப் போகட்டும். திருவனந்தபுரத்து சுந்தரம் பிள்ளை தானே...கிடக்கட்டும் கிடப்பிலே! அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அலையும் பாடல் வரிகள். தம்பிகளுக்குக் கடிதம் எழுதிச் சோர்ந்திருக்கும் வேளைகளிலெல்லாம் ஒவ்வொரு வரி எழுதி இருப்பார் போலும். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... பிறந்த பின்னர்' - இது ஒப்பனிங் வரி. தமிழ் இரண்டாம் தாளில் பொதுக்கட்டுரை எழுதுவது ...

கோவிந்தனைக் காணச் சென்ற கோவிந்தசாமி

பதினாறு வருடங்கள் கழித்து மீண்டும் திருப்பதி. அண்ணன், அண்ணியுடன் ஒரு நாள் விசிட். ஒன்பதாம் வகுப்பில் சேருமுன்னர் திருப்பதியில் மொட்டையடித்து நெடும்பாம்புக்கியூவில் நின்ற அனுபவம் இலேசாக நினைவிலிருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு நாள் ட்ரிப் நன்றாகவே இருக்கிறது. வோல்வோ பேருந்து, காலை டிபன், மதிய சாப்பாட்டிலிருந்து தரிசனம், பிரசாதம் வரை அனைத்தும் அரேஞ்ச் செய்துவிடுகிறார்கள். கூடவே ஒரு திருட்டுமுழி, உடைந்த ஆங்கில கெய்டு. மேல் திருப்பதியில் காட்டேஜ் என்று ஒன்றைக்காட்டி அங்கே ஒரே ஒரு டாய்லட்டைத் திறந்துவைத்து அடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வேடிக்கை பார்க்கிறார்கள். பிறகு செல்ஃபோன்களைப் பிடுங்கிக்கொண்டு செருப்புகளை அங்கேயே கழற்றச் சொல்லி மே மாதத் தணல் வெயிலில் நான்கு தெரு நடக்கச் சொல்கிறார்கள். வேங்கடவனின் தரிசன ஆர்வம் பலரை ...

Wedding – The Director’s Cut

An update has been long pending. It is funny to write about one's own wedding though. May be that's why I have been putting it off all this while. But hey, if I don't write it now, chances are that it will never get written and a few puzzled or pissed off people will remain to be so, so here goes... Facts first: We got married on June 6th, 2010 :) And that raises the first question - oh, wasn't it ...

மேல்kind – சகாப்தம் சமாப்தம்

முன்னொரு காலத்தில் சைதையாற்றங்கரையில் முச்சங்கர் என்றொரு கும்பல் இருந்தது. பொழுது போகாததோர் சுபயோக சுபதினத்தில் அவர்கள் ஒன்றுகூடி, பள்ளிப்படையருகே லொள்ளுக்கூட்டமொன்று போட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட...சே! பழக்க தோஷம்...அனைத்திந்திய பேச்சிலர்கள் சங்கம் ஒன்றை உருவாக்கி, மேல்kind என்ற உலகமுக்கியத்துவம் வாய்ந்த வலைப்பதிவினைத் தொடங்கினர். தமிழ் வலைப்பதிவுலகம் மிரண்டுபோய்த் திரும்பிப் பார்த்தது.

வேலாயுதத்தின் 7-ஆம் அறிவு

விசயின் விசிறிக்கூட்டம் வேலாயுதம் போஸ்டர் கண்டு வீறிட்டுக்கொண்டிருந்த நேரம், சூர்யாவின் சுற்றுவட்டாரங்கள் சூப்பர் கதையென்று சூளுரைத்துக்கொண்டிருந்த நேரம், நண்பனிடம் இத்திரைப்படங்கள் இரண்டையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சட்டென்று சொன்னான்: “மச்சி, ஒரே வீடியோ கேம்ல இருந்து காப்பி அடிச்சு எப்பிடிடா ஒரே நேரத்துல ரெண்டு படம் ரிலீஸ் பண்றாங்க?”.

பெயரில்லாத சிறுகதை – மீள்பதிவு

இச்சிறுகதையை எழுதி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது. இன்று படித்துப் பார்க்கும்பொழுது பல இடங்களில் காமெடியாக இருக்கிறது (எழுத்தல்ல, எழுதப்பட்ட விதம்). அப்போது இதைப் படித்துப் பார்த்த என் நண்பனின் அறைத்தோழன் அவனிடம் சொன்னது: “யார்றா எழுதுனது? சுஜாதாவுக்குப் பக்கத்து வீட்டுப் பையனா!”. வாத்தியாரைப் படித்து வளர்ந்ததில் வாத்தியார் நடையில்தானே எழுத வருகிறது! என்ன செய்ய? இனி கதை. *** என் கழுத்துச் சங்கிலியை நிமிண்டிக்கொண்டே அவள் அதை ஆரம்பித்தபோதுதான் எனக்குக் கோபம் வந்தது. “தோ பாருடீ! சும்மா ‘காயமே இது பொய்யடா’ன்னு புல்ஷிட் பேசற ஆள்ட்டல்லாம் என்னால வரமுடியாது!” – கத்திவிட்டேன். கண்ணோரமாய்க் கொஞ்சமாய்க் கண்ணீர் எட்டிப்பார்க்க, திரும்பிப்படுத்தவள்தான், அப்புறம் என் பக்கம் திரும்பவேயில்லை. கொஞ்ச நேரம் அவளது முதுகை வெறித்துவிட்டு பிறகு தூங்கிப்போனேன். காலையில் கண்ணாடி முன் ...

Quidditch World Cup 2010 – A roundup

On any other evening, the DeWitt Clinton Park in Hell's Kitchen, Manhattan might have been your normal walk-the-dog, pitch-the-ball park, with a spattering of tourists loitering around, cursing their bad luck on not getting their passes to that day's taping of the Jon Stewart show next door. But, today wasn't that usual evening.

Tamil Nadu government website outs mass-scale personally identifiable information

Are you one of those privacy freaks? Did you ever fret about how Facebook (or Google, perhaps) is outing your name, friends circle, public photos and other bits and pieces of your information that you care about? Well, if you are an Indian citizen, especially from Tamil Nadu, you have much more to bother about that these stupid little tidbits of information. The reason?

Keeping your head above water – Integrated Life-cycle Management 1

In this series of posts, I hope to share with the readers some of my experiences in dealing with Integrated Lifecycle Management (ILM). Oh yes, this is a pure-play IT post. I hope it would be relevant to anyone working in IT projects since one has to always make these decisions at some point of time in his career.

Featured

Latest


வேலாயுதத்தின் 7-ஆம் அறிவு

விசயின் விசிறிக்கூட்டம் வேலாயுதம் போஸ்டர் கண்டு வீறிட்டுக்கொண்டிருந்த நேரம், சூர்யாவின் சுற்றுவட்டாரங்கள் சூப்பர் கதையென்று சூளுரைத்துக்கொண்டிருந்த நேரம், நண்பனிடம் இத்திரைப்படங்கள் இரண்டையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சட்டென்று சொன்னான்: “மச்சி, ஒரே வீடியோ கேம்ல இருந்து காப்பி அடிச்சு எப்பிடிடா ஒரே நேரத்துல ரெண்டு படம் ரிலீஸ் பண்றாங்க?”.

Recommended Articles