என் முதல் நூல் – அமெரிக்கா போகணுமா
கேள்வி:
நேற்று மாலை ஏழு மணிக்கும் இன்னபிற பொதுவான மாலை ஏழு மணிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கி, மேற்கோள் காட்டிக் குறிப்பு வரைக.
பதில்:
பத்ரியிடமிருந்து நேற்று மாலை வந்த தொலைபேசி அழைப்புக்காகக் கொஞ்ச நாளாகவே காத்திருந்தாலும் அது வந்த தருணத்தில் கைகால்கள் பரபரக்க, மூன்று சக்கரத் தேரேறிக் கிழக்குப் பதிப்பகத்திற்கு வாயுவேக மனோவேகமாகப் பறந்து போய் அந்தக் கட்டு புத்தகங்களை வாஞ்சையுடன் நோக்கிய நேற்று மாலை ஏழு மணி என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு மறக்க முடியாத தருணம்.
ஆம் நண்பர்களே! குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையாராகப் போன கதையாக இத்தனை காலம் வலைப்பதிவுகளில் அடித்துக்கிளப்பிக்கொண்டிருந்துவிட்டு இப்போது நான் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட ஒரு புத்தகம் வந்திருக்கிறது. விளையாட்டு நிஜமாகவே வினையாக, செயலாக உருவெடுத்திருப்பதில் கிறுகிறுத்து அலைந்துகொண்டிருக்கிறேன். ‘அமெரிக்கா போகணுமா’ என்ற இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் புதிதாக ஏதும் சொல்வதை விட, இந்தப் புத்தகத்திலிருக்கும் முன்னுரையையே இங்கே தருவது உசிதம் என்று கருதுகிறேன்.
புத்தகத்தின் முன்னுரை:
உள்ளே புகுமுன் ஒரு நிமிடம்
நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை பேர், எத்தனை எத்தனை காரணங்களுக்காக அமெரிக்கா போகின்றனர் என்று பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. படிப்பிற்காக, வேலைக்காக, உயர்கல்விக்காக, பொழுதுபோக்கிற்காக, மருத்துவத் தேவைகளுக்காக, வியாபார நிமித்தமாக, அரசியல் காரணங்களுக்காக, கலை வளர்ப்பதற்காக, கல்யாணம் செய்துகொண்டதற்காக, பிள்ளைகள் அங்கே இருப்பதற்காக, பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இவர்கள்தான் எத்தனை எத்தனை விதமானவர்கள்! முருகப்பெருமான் கணக்காக உலகம் சுற்றும் வாலிபர்களிலிருந்து முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு தவிர வேறு உலகம் அறியாத பிராணிகள் வரை எத்தனை பேருக்கு அமெரிக்கா செல்லும் தேவை வந்துவிடுகிறது!
அமெரிக்கா போவதென்று முடிவு செய்வதற்கும் அமெரிக்கா போவதற்கும் இடையேதான் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன! சும்மா பயணச்சீட்டு வாங்கி பஸ் ஏறுவது போலல்லவே இது. அனுமதிகள், விதிமுறைகள், விளக்கங்கள், விண்ணப்பங்கள் என்று ஒரு பெரிய பட்டியல். பாஸ்போர்ட் என்றால் என்ன என்பதிலிருந்து நமக்கு எழும் சந்தேகங்களும் குழப்பங்களும் இன்னொரு பெரிய பட்டியல். இப்படி, அடிப்படை ஆயத்தங்கள் முதல் கட்டம்.
அதன்பிறகு, எவ்வளவு மூட்டை எடுத்துச்செல்லலாம் என்பதிலிருந்து ஏர்போர்ட்டில் என்னென்ன செய்யவேண்டும் என்பது வரை அமெரிக்கா கிளம்பும் முஸ்தீபுகள் இரண்டாம் கட்டம்.
அமெரிக்காவில் ஆஜரான பிறகு, நாடு நகரம், ஊர் ஜனங்கள், தட்பவெப்பம், சட்டதிட்டம் என்று அமெரிக்கா நமக்கு அறிமுகமாகும் கதை மூன்றாம் கட்டம்.
அறிமுகமில்லாத பிரதேசத்தில் முற்றிலும் புதிய சூழ்நிலையில் தங்குவதற்கு வீடு, போக்குவரத்து, சாப்பாடு, தொலைபேசி, வங்கிக்கணக்கு, லைசென்ஸ், வரி, ஷாப்பிங், ஊருக்குப் பணம் அனுப்ப என்று வரிசை கட்டி நிற்கும் சமாசாரங்கள் நான்காம் கட்டம்.
இதுதவிர, படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விரும்புபவர்களுக்கு என்ன படிப்பு, என்ன கல்லூரி, என்னென்ன தகுதித்தேர்வுகள், எப்படி விண்ணப்பிப்பது என்று நிறைய இருக்கிறது.
ஒவ்வொரு கட்டத்திலும் கேள்விகள், கேள்விகள். கனவுகளுடன் கூடவே கலர் கலராக சந்தேகங்கள். இந்த சந்தேகங்கள் ஒவ்வொன்றையும் கையிலெடுத்து ஜாலியாக விடை சொல்லிக்கொண்டே போகும் முயற்சிதான் உங்கள் கைகளில் அமர்ந்திருப்பது.
கல்லில் செதுக்கியது போய், துணியில் தீட்டியது போய், காகிதத்தில் கிறுக்கியது போய், அச்சில் அழுத்தியது போய் இன்று இணையத்தில் இறங்கியிருக்கிறது தமிழ். இணையத்தில் தமிழ் எழுதிப் பழகிக்கொண்டிருக்கும் சில நூற்றுக்கணக்கான ஆர்வலர்களில் ஒருவன் நான்.
என்னைப் போன்றதொரு ஜந்து கூட புத்தகமெல்லாம் எழுதமுடியும் என்று நம்பிய/நம்பிக்கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய பா. ராகவன் மற்றும் பத்ரி சேஷாத்ரி அவர்களின் அன்பில் நனைந்திருக்கிறேன்.
அன்புடன்,
ஷங்கர்.

42 Comments
வாழ்த்துக்கள் ஷங்கர்!
வாழ்த்துக்கள் ஷங்கர்!
அமெரிக்கா முதல் முறை செல்லும் நண்பர்களுக்குக் கொடுக்க ஒரு புத்தகம் ரெடி!!
- சாகரன்.
வாழ்த்துகள் சங்கர், உங்கள் நடையில் அது நன்றாக இருக்கும் என்று திண்ணமாக நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் ஷங்கர்!!!
..aadhi
congrats Shankar.
-Mathy
Great Job boy!!!!
Congrats!!!!!
Great way to go.. So up software engineers crap and get full time into this..
-Pradip
வாழ்த்துக்கள் ஷங்கர். மருத்துவ காப்பீடு இல்லா பல மாணவர்களுக்கு அமெரிக்க பொது நலத்துறை ஒரு வரப்பிரசாதம். அதைப்பற்றியும் குறிப்பிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள்..! (அப்படியே ‘அமெரிக்காவிலே இருந்து திரும்பி வரணுமா?!’ அப்படீன்னும் ஒரு கையேடு இலவச இணைப்பா தர்றீங்களாமே?!)
- மாயவரத்தான்…
எலேய்ய்ய் சங்கரு… புஸ்தகத்தைப் பாத்தேன். கலக்கலா வந்திருக்கு… வாழ்த்துக்கள்…
ahaang! congrats!
//என்னைப் போன்றதொரு ஜந்து கூட புத்தகமெல்லாம் எழுதமுடியும் என்று நம்பிய/நம்பிக்கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய பா. ராகவன் மற்றும் பத்ரி சேஷாத்ரி அவர்களின் அன்பில் நனைந்திருக்கிறேன். //
தெரிஞ்ச ஜந்துக்கள் தான் எழுத முடியும்கிறது தெரிஞ்ச விசயம் தானே. அதுக்கு ஏன் இந்த பில்ட் அப்?.ஊக்கங்கிறது தெரிஞ்ச ஜந்துக்களுக்கு தானே. சும்மா நடிக்காதே கண்ணா.
அச்சில பார்த்து சந்தோஷமாக இருக்க என் வாழ்த்துக்கள் கண்ணா.
வாழ்த்துகள் ஷங்கர்.
ஒரு வாரம் முன்பு வெளியாகி இருந்தால், ஜூலையில் இங்கு வரப்போகும் பெற்றோர்களுக்கு இதி வாங்கிக் கொடுத்துவிட்டு அக்கடா என்று உட்கார்ந்திருப்பேன். ஒரு வாரமாய் போனிலும், மெயிலிலும் நான் கொடுத்த இன்ஸ்டக்ரக்ஷன் அவஸ்தைகளை யோசிக்கும்போது, இதன் அவசியம் புரிகிறது. நம்ம தமிழ் இணையத்து முகமில்லா சகா ஒருத்தர் போட்டிருந்த பிரயாண முஸ்தீபு பதிவை அனுப்பி வெச்சேன். இப்ப நீங்க பொஸ்தகமே போட்டுடீங்க. ம்..நடக்கட்டும்.
தை எழுதிவிட்டு நீங்கள் அங்கேயே குந்தியிருப்பதுதான் ஊஊஊஊதைக்கிறது
)
பெயரிலி சார்.. ‘தற்கொலை செய்து கொள்வது எப்படி’ என்று ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. நீங்கள் எழுதுகிறீர்களா?! அமெரிக்கா செல்வது எப்படின்னு எழுதினா கட்டயமா அமெரிக்கா போய் தான் ஆகணுமா?!
//உங்கள் நடையில் அது நன்றாக இருக்கும் என்று திண்ணமாக நம்புகிறேன். //
தங்கமணியான சொல்லை வழிமொழிகிறேன். வாழ்த்துக்கள் ஷங்கர். அமுக்கி வாசிக்கும்போதே கோழி எதையோ அடைகாக்குதுன்னு புரிஞ்சுது. அடுத்த ‘குவா குவா’ என்ன, குவாண்டமா?
-காசி
good wishes on becoming an author of a book.what next
‘தற்கொலை செய்து கொள்வது எப்படி’ என்று ஒரு புத்தகம் தேவைப்படுகிறது.
mayavarathan, do you a need a book for this
வாழ்த்துக்கள் சங்கர்.
அடுத்து குவாண்டமா? கலக்குங்க.
//mayavarathan, do you a need a book for this //
SAichupputtaRae..!!
மாயவரத்தான், இப்புடியே கேட்டுக்கிட்டிருந்தீங்க, “கொலை செய்வது எப்படி?” எப்படி என்று புத்தகம் எழுதுவேன். அப்போ, நீங்க நிச்சயமாக இப்போ நீ கேட்ட ரூட்டிலே கேள்வி கேட்கமுடியாது. மத்தவுங்களுக்கும் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.
அன்புள்ள சங்கர், உங்கள் முதல் புத்தகம் அச்சில் வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள். உங்களின் எழுத்து நடையில் அது நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னதையே நானும் நினைக்கிறேன். உங்கள் எழுத்து முயற்சிகள் மேலும் வளர்ந்து சிறக்கவும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஷங்கர்… நிறைய பேருக்கு உங்கள் புத்தகம் உதவியாக இருக்கும். உங்கள் புத்தகம் வாங்கும் வரை/ இல்லாதவர்களுக்கு குறைந்த பட்சம் விமான பயணத்திற்காவது என் பதிவு உதவலாம் என்பதால் முதல் விமான பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி… என்ற எனது பதிவின் சுட்டி:: இங்கே
புத்தக எழுத்தாளர் ஆனதிற்கும், முதல் நூலிற்கும் வாழ்த்துகள்! நிறைய வெற்றிகள் கிட்டட்டும்.
thanks for all of your wishes
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் ஷங்கர்
வாழ்த்துகள் ஷங்கர். (உங்களுக்கு எப்பொழுது இந்தப் புத்தகம் பயன்படப் போகிறது
)
-பாலாஜி
பாஸ்டன்
வாழ்த்துக்கள் ஷங்கர்.
ஷங்கர்,
வாழ்த்துக்கள். அப்படியே இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும், அடக்க விலை எல்லாம் சொல்லுங்க (இணையம் மூலமா வாங்க முடியும்னா சுட்டி கொடுங்க)
புத்தக எழுத்தாளராகியிருக்கும் எங்கள் கோல்டு கோயிஞ்சாமிக்கு வாழ்த்துக்கள்…
எங்கே, எப்போ, எவ்வளவுக்கு கிடைக்குங்கிறதையும் எழுதுறது…
/கோயிஞ்சாமி நெம்பர் ஓன்/
அங்கங்கே பக்கங்கள் புரட்டிப் பார்த்துட்டேன், இன்னும் முழுசா படிக்கலை.
மொழிநடை சூப்பரோ சூப்பர். தலைப்புகளும் சோக்காக்கீது.
மற்றதை படிச்சுட்டு சொல்லறேன்.
(ஆமாம், ‘தேவதை’க்குத் தெரியுமா இந்த விஷயம்?)
adra sakka, adra sakka….
vikram
வாழ்த்துக்கள் ஷங்கர்.
வாழ்த்துக்கள் சங்கர். இதுபோல இன்னும் பல பயனுள்ள புத்தகங்கள் எழுத அன்போடு வாழ்த்துகிறேன்!
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் ஷங்கர்.
போனவருடம், நடாஷா ப்ரதாப்பின் இந்த Wanna Study in the US? 101 Tips to get you there! வாங்க நினைத்தேன். இப்பொது நீங்கள் அதற்கும் மேலான ஒருநூலை தமிழில் கொண்டுவந்துவிட்டீர்கள் பாராட்டுக்கள் மீண்டும். பத்ரிக்கும் நன்றி.
Gr8 work shanks…
nicely written.. nice titles.. beautiful flow of ideas.. ‘nadai romba nalla irukku.. ‘
as usual shankar!!.. idukku mela enna solla!!..
innum paditthu mudikkalai.. will let u knw when i finish..
inda ella pechillum ennaku romba pidithta vishayam.. en mudal nool ..
ennum pala noolgal varum endra sandoshamana vishayam..
ennudaiya vazhthukkal..
anbudan..
naan.
Dear Shankz,
Congrats! I am sure this is your first step and miles to go..
I was waiting for this day, seekram padikaren
Luv,
RJB
Congratulations Shankar. Kataayamaa vangi padikiren
வாழ்த்துக்கள்.
Congrats and all the best shankar.
- suresh kannan
அன்புக்குரிய சங்கர்,
இந்த வார (அக் 5, 2005 – ஜெ அட்டைப்படம் உடையது) இந்தியா டுடே-யில் உங்களின் இந்த புத்தக மதிப்புரை வந்துள்ளது. பார்த்தீர்களா!?
பாராட்டுக்கள்.
your book makes me to try for US studies or US job.
It works even reverse side. Thanks for the guide.
Vaalga valamudan !!!
– Karthikeyan Ganesan