மேல்kind – சகாப்தம் சமாப்தம்
முன்னொரு காலத்தில் சைதையாற்றங்கரையில் முச்சங்கர் என்றொரு கும்பல் இருந்தது. பொழுது போகாததோர் சுபயோக சுபதினத்தில் அவர்கள் ஒன்றுகூடி, பள்ளிப்படையருகே லொள்ளுக்கூட்டமொன்று போட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட…சே! பழக்க தோஷம்…அனைத்திந்திய பேச்சிலர்கள் சங்கம் ஒன்றை உருவாக்கி, மேல்kind என்ற உலகமுக்கியத்துவம் வாய்ந்த வலைப்பதிவினைத் தொடங்கினர். தமிழ் வலைப்பதிவுலகம் மிரண்டுபோய்த் திரும்பிப் பார்த்தது.
காலச்சக்கரம் உருண்டோடியது. பேச்சிலர்கள் ஒவ்வொருவராய் விழுந்தனர். கிருபாசங்கரம்பிள்ளையவர்களும் மீனாக்ஷிசங்கரம்பிள்ளையவர்களும் கலியாணமாகிக் காணாமற்போய் இப்போது டுவிட்டுப்பட்சியில் அவ்வப்போது தலைகாட்டுவதாகக் கேள்வி. கூட்டத்தில் ஐக்கியமான சைதை ராம்கியவர்களும் புத்தகங்களாக எழுதித்தள்ளிக் கழகத்திற்குக் களங்கம் விளைவித்தபின்னர் கபாலென்று எகிறினார்.
ஒண்டிவீரனாக நொண்டியடித்துக்கொண்டிருந்த மயிலை சங்கரனார் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, காலத்தின் கட்டாயத்தால் கவுந்து விழுந்துவிட்டபடியால் மேல்kind என்ற இந்த சகாப்தம் இத்துடன் சமாப்தமாகிறது என்பதை வருத்தத்துடன் சொறிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு சங்கரனாரின் ஆங்கில வாக்குமூலத்தைப் படிக்கும்படி விண்ணப்பித்துக்கொள்கிறோம்.

One Comments
என்னது, சாப்தமா முடிஞ்சு போச்சா? இனிமேதான் மெய்யாலுமே அங்கலாய்க்க நெர்ய நெர்ய மேட்டர் கெடைக்கும்.
எனவே, சகாப்தத்தின் அடுத்த அத்யாயம் தொடங்கினால் நல்லது